பாகிஸ்தானிற்கு ஒரு விரலை நீட்ட ஏனைய நான்கு விரல்களும் சிறீலங்காவை காட்டுகின்றன – மனோ எம்பி

378 Views

நான்கு விரல்களும் சிறீலங்காவை காட்டுகின்றன

இப்படி “சொறி” (Sorry) என்று கூட சொல்லாதவர்கள் ஆளும்-வாழும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். சுட்டும் விரலால் பாகிஸ்தானை குற்றம் சாட்டும் போது மற்றெல்லா விரல்களும் இங்குள்ள இவர்களை காட்டுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன என்ற நபர் மத நிந்தனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரியூட்டிக் படு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு வருத்தம் தெரிவித்துள்ளதோடு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை துாக்கில் போடவேண்டும் என்று இலங்கையில் உள்ள பலதரப்பால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு பாகிஸ்தானிலும் இக் கொலையைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. அப் போராட்டங்களில் இடுபட்டவர்கள் ‘SORRY SRI LANKA” என்ற வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பில் தனது கண்டனத்தை தனது முக நுாலில் தெரிவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,

இப்படி “சொறி” (Sorry) என்று கூட சொல்லாதவர்கள் ஆளும்-வாழும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். சுட்டும் விரலால் பாகிஸ்தானை குற்றம் சாட்டும் போது நான்கு விரல்களும் சிறீலங்காவை காட்டுகின்றன.

பிரியந்த குமாரவை கொலை செய்த பாகிஸ்தான் அடிப்படைவாதிகளுக்கு உச்ச தண்டனை வேண்டும். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதை நாம் கோருகிறோம்.

ஆனால், நம் நாட்டில், மிருசுவில் தமிழ் கிராமத்தில், பாலகர்கள் உட்பட 8 பேரை கொலை செய்ததால், கைதாகி, எமது ஆட்சியின் போது ஜூன் 2015ம் வருடம், முதன் முறையாக, இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட, சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ சிப்பாயை, ஜனாதிபதி கோதாபாய பதவிக்கு வந்த உடனேயே, 2020ம் வருடம் முதல் வேலையாக விடுவித்தார்.

இன்று இவர்கள்தான் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுகிறார்கள்..!

இப்படி பல. இது ஒரேயொரு உதாரணம் மட்டுமே.

நடந்தவைகளை ஒப்புவித்து ஒப்பாரி அரசியல் செய்பவன் நானில்லை. ஆனால், இந்த இரட்டை நிலைப்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இலங்கையிலும் நடந்த குற்றங்களை ஏற்று “சொறி” சொல்லும் காலம் வர வேண்டும். இல்லாவிட்டால் மீட்சி இல்லை.

கீழே படங்கள்:

நான்கு விரல்களும் சிறீலங்காவை காட்டுகின்றன

(1)பாகிஸ்தானில் சிலர் “சொறி ஸ்ரீலங்கா” என்கிறார்கள்.

264861389 10216077797656879 8366238806688324999 n பாகிஸ்தானிற்கு ஒரு விரலை நீட்ட ஏனைய நான்கு விரல்களும் சிறீலங்காவை காட்டுகின்றன - மனோ எம்பி

(2)விடுதலை பெற்ற ரத்நாயக்க தன் வீடு போய் தான் கொலை செய்த வயதை ஒத்த தன் அப்பாவி மகளை கொஞ்சுகிறார்.

நான்கு விரல்களும் சிறீலங்காவை காட்டுகின்றன

(3) சிப்பாய் ரத்நாயக்க

Leave a Reply