இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி :பத்திரிகைகள் முடங்கும் அபாயம்

283 Views

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று  பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு எரிபொருள்  கிடைக்கதாத காரணத்தினால்   விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன தலைவர்கள் , ஆசிரியர் பீடத்தினர் வடமாகாண ஆளூநர் , மாவட்ட செயலர் ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழில் மூன்று தொலைகாட்சி நிறுவனங்கள், வானொலி சேவைகள் என்பன உள்ளடங்கலாக 10 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் ஊடக பணியாளர்கள் என பலரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Tamil News

Leave a Reply