எரிபொருள் கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சுகதார ஊழியர்கள்

புத்தளம் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தாம் கடமைக்கு வருவதற்கு எரிபொருளை வழங்குமாறு கோரி குருணாகல்-புத்தளம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் இல்லாத காரணத்தினால், தம்மால் கடமைக்கு வர முடியவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். எரிபொருள் கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சுகதார ஊழியர்கள்

வாரத்தில் ஏழு நாட்களும் தாம் பணிக்கு வர வேண்டும் எனவும் ஏனைய அரச சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சுகதார ஊழியர்கள் 100 கிலோ மீற்றருக்கும் அப்பால் இருந்து பணிக்கு வர வேண்டியுள்ளது. இதனால், எரிபொருள் பிரச்சினைக்கு வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil News