“..காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கை ரீதியாக ஆதரிக்கிறோம். ஆனால், அதற்காக இங்குள்ள பலரை போல நாங்களும், “கோட்டா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை, காலிமுக திடலில் இருந்தே கற்றோம் என எண்ண வேண்டாம்..” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் “..ஜனாதிபதி கோட்டாபய, இதைவிட பலமாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவாக இருந்த போதே, “கோட்டா-கோ-ஹோம்” என கோஷம் எழுப்பி போராடியவர்கள், நாங்கள்..” என்றும் கூறியுள்ளார்.