“தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவியுள்ளது. டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ் குறைக்கிறது” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் திகதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் தடையும் விதித்துள்ளன.