சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் அகற்றம்

373 Views

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர்

அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி படிமலையடிவாரப் பகுதியில் கடந்த சனிக்கிழமை பிக்குகளால் காவல்துறையின் பாதுகாப்புடன் இரவோடு இரவாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை அப்பகுதி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து   அகற்றப்பட்டுள்ளது.

இரகசியமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருக்கோவில், பொத்துவில், காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உதவி தவிசாளர் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இந்த நிலையில் இரு நாட்களுக்குள் புத்தர் சிலையை அகற்றுவதாக திருக்கோவில் காவல்துறையினர் உறுதியளித்த நிலையில், குறித்த புத்தர் சிலை நேற்று அகற்றப்பட்டுள்ளது.

Leave a Reply