அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியும் இணைந்தே எனது மகனை கொலை செய்தனர் – பெற்றோர் குற்றச்சாட்டு

404 Views

எனது மகனை கொலை செய்தனர்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவரின் பெற்றோர், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மயூரனுக்கும் இந்த கொலையில் தொடர்பிருப்பதாக  குற்றம் சுமத்தியுள்ளனர். அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியும் இணைந்தே எனது மகனை கொலை செய்தனர் என்று தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி பாலசுந்தரத்தின் என்பவர் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோர்,

எனது மகனை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே அடித்துக் கொன்றார் என  குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply