டெல்டாவைவிட 70 மடங்கு வேகத்தில் பரவும் ஒமிக்ரோன்

டெல்டாவைவிட 70 மடங்கு வேகத்தில்டெல்டா வகை கொரோனாவைவிட ஒமிக்ரோன் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனினும் டெல்டாவைவிட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமிக்ரோன் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகை கொரோனாக்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், டெல்டாவைவிட 70 மடங்கு வேகத்தில் ஒமிக்ரோன் மற்றவர்களுக்குத் தொற்றி, பல்கிப் பெருகுவது தெரியவந்தது.

இருந்தாலும், அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமிக்ரோன் டெல்டாவை விட மிகக் குறைவாகவே நுரையீரலை தாக்குவதும் ஆய்வில் தெரியவந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.