சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் 80 வீத உணவகங்கள் மூடப்படும்; சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்

80 வீத உணவகங்கள் மூடப்படும்80 வீத உணவகங்கள் மூடப்படும்: சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டிலுள்ள 80 வீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் சனிக்கிழமை முதல் மூடப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பிரதானமாக எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமையும் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும். இந்நிலையினால் தமது சேவைகளை முன்னெடுப்பதற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர் என்றார்.