இந்தியா: ஒமிக்ரான் பரவலை தடுக்க விமான நிலையங்களில் அமலுக்கு வந்தன புதிய கட்டுப்பாடுகள்

336 Views

நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன

ஒமிக்ரான் (Omicron)கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபொன்று சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டிருந்தது.

‘ஒமிக்ரான்’ என பெயரிடப்பட்ட அந்த உருமாறிய புதிய கொரோனா திரிபின் பரவலை தடுக்க, உலக நாடுகள் அனைத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில், 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு பயணக்கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழக விமான நிலையங்களிலும் அப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடுதலாகியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை, விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அப்பன்னிரெண்டு நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12 நாடுகள் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம் மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகியவை உள்ளன. இந்த 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad இந்தியா: ஒமிக்ரான் பரவலை தடுக்க விமான நிலையங்களில் அமலுக்கு வந்தன புதிய கட்டுப்பாடுகள்

Leave a Reply