மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்

சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மலேசியாவிற்கு விமானம் மூலம் வேறு நாட்டுக்குச் செல்வதற்காகவே இந்தக் கப்பலில் இந்தக் குழுவினர் ஏறியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து 1800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வுங் தாவோ துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.