240 Views
கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இவர்களில் மூவர் 14 வயதிற்கு உட்பட்டவர்கள். 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருள்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.