இலங்கை :சந்திரகாந்தன், வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் – இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

420 Views

அமைச்சர்களின் எண்ணிக்கை 26  மேலும் இருவர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பதவியேற்றுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவரும் இராஜாங்க அமைச்சர்களாக இன்று பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவனேசத்துரை சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக எஸ்.வியாழேந்திரனும், கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக சந்திரகாந்தனும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply