தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு நாளை நினைவு கூர காவல்துறையினர் தடை

 

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவுதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு நாளான இன்று நினைவு நாளை அனுஸ்டிக்கச் சென்றவர்களுக்கு  காவல்துறையினர்  இடையூறுகளை ஏற்படுத்தியதோடு அஞ்சலி செலுத்தவும் தடைவிதித்துள்ளனர்.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வினை தமிழர்களுக்கு வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக அன்னை பூபதி உண்ணாவிரதமிருந்துவந்தார்.

இந்த நிலையில் அவரது போராட்டம் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் 19-04-1988 உண்ணாவிரதத்தின்போது உயிர்நீர்த்தார். அவரின் 34வது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் ஆகியோர் அன்னைக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளையில் அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட  காவல்துறையினர், எக்காரணம் கொண்டும் யாரும் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் கைகளிலிருந்த கற்பூரத்தினையும் தட்டுவிட்ட காவல்துறையினர் அவர்களை அங்கிருந்துசெல்லுமாறு கடும் தோனியில் அறிவுறுத்தியுள்ளனர்.

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் யாரும் அன்னைபூபதியின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தமுடியாது என தெரிவித்த காவல்துறையினர்மீறி செய்தால் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்பதை தற்போதைய இந்த செயற்பாடு மீண்டும் இந்த நாட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அஞ்சலி செலுத்த சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் அன்னையின் நினைவு  நாளை வீடுகளில் அனுஸ்டிக்குமாறு மக்களிடம் அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG 0864 தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு நாளை நினைவு கூர காவல்துறையினர் தடை

இந்நிலையில், அன்னை பூபதியின் 34வது ஆண்டு நினைவு தினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இன்று (19) அனுஷ்ட்டிக்கப்பட்டது.