இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள விசா குறித்த அறிவிப்பு

download 2 இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள விசா குறித்த அறிவிப்பு

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் விசா மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கமைவாக செயற்பட வேண்டுமென இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டிலுள்ள கோவிட் நிலைமைகளைப் கருத்திற் கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும்  விடுத்துள்ள அறிவித்தலில்,

விசா மற்றும் ஏனைய சேவைகள் தொடர்பாக இலங்கை பிரஜைகளிடமிருந்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் பல்வேறு கோரிக்கைகளை பெற்றுள்ளது.

சாத்தியமான சவக வழிகளிலும் இக்கோரிக்கைகளுக்கு சேவை வழங்குவதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் உத்தியோகத்தர்கள் வழமை போல் செயற்பட அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலை தொடர்பன தரவுகளுக்கு அமைவாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புக்களும் அதிகரித்த நிலையில், டெல்டா வகையான கொரோனா வைரஸ் உலகலாவிய ரீதியில் காணப்படும் நிலையிலும் பொது மக்களின் நலன்களின் மீதான அக்கறை காரணமாக சூழலுக்கு ஏற்றவாறு அலுவலக கடமைகளை முன்னெடுப்பதற்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக விசா மற்றும் ஏனைய கொன்சியூலர்  வேவைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கமைவாக செயற்பட வேண்டும் என அறியத் தருகின்றோம்” என்றுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021