அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! கையொப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எம்.பிக்களிடம் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தொடங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவில்லை என்றால் அவருக்கு எதிராக பதவி நீக்க பிரேரணையை முன்வைக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News