சட்டவிரோதமாக இந்தியாவுக்கு புலம்பெயரும் நைஜீரியர்கள்: நைஜீரிய தரப்பு என்ன சொல்கிறது?  

இந்தியாவுக்கு நைஜீரியர்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்வதை தடுக்கும் விடயத்தில் இந்திய அரசுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக நைஜீரிய உள்துறை அமைச்சர் ரவுஃப் அரேக்பெசோலா தெரிவித்திருக்கிறார். 

இந்த ஒத்துழைப்பு போலியான நைஜீரிய கடவுச்சீட்டுகள், பிற போலியான ஆவணங்களை தடுக்கும் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக போலியான நைஜீரியா பயண ஆவணங்களை சட்டவிரோத கும்பல்களிடமிருந்து சிலர் பெறுகின்றனர் என அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.

நைஜீரியாவுக்கான இந்திய உயர் ஆணையர் கங்காதரன் பாலசுப்ரமணியனை தனது அலுவலகத்தில் வரவேற்கையில் ‘சட்டவிரோத புலம்பெயர்வு’ குறித்த கருத்தை நைஜீரிய உள்துறை அமைச்சர் ரவுஃப் அரேக்பெசோலா வெளிப்படுத்தியிருக்கிறார்.