நாட்டின் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பால் சுகாதார சேவைகள் முடக்கம்: நோயாளர்கள் பாதிப்பு

நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (08.02.2023) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.