தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம்

123 Views

இந்திய வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் வரும் 13-ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது.

தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 13-ம் திகதி தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply