சுற்று சூழலை மாசுபடுத்தும் அதானியின் நிறுவனம்- நிதி தொடர்பான சேவையை நிறுத்திய Bank oF New York Mellon Corp நிறுவனம்

277 Views

நிதி தொடர்பான சேவை

அவுஸ்திரேலியாவில் தொடங்கப்படவுள்ள அதானி நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு (Carmichael Coal Mine) நிதி தொடர்பான சேவை வழங்கும் பொறுப்பிலிருந்து  Bank oF New York Mellon Corp   நிறுவனம் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

ஏனெனில் Bank oF New York Mellon Corp   நிறுவனத்தின் சுற்றுச் சூழல், சமூக மற்றும் நிர்வாக விதிகளில் இயற்கை வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல், கால நிலையை பாதிக்கும் செயல்களை குறைத்தல்,  ஆற்றல் துறையில் புதிய தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல், பொறுப்புடன் நிர்வகித்தல், நிறுவனம் செயற்படும் பகுதியில் வசிக்கும் மக்களுடன் நல்லுறவை பேணுதல், வணிக நெறிமுறைகளை வலுவாக கடைப்பிடித்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், அந்த நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி நிறுவனத்துடனான உறவு குறித்து மேற்கொள்ளப்பட்ட மீளாய்வில், அந்த நிறுவனம் பொறுப்பிலிருந்து  Bank oF New York Mellon Corp   நிறுவனத்தின் சுற்றுச் சூழல், சமூக மற்றும் நிர்வாக விதிகளுடன் ஒத்துப் போகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எனவே அதானி நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்ள முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad சுற்று சூழலை மாசுபடுத்தும் அதானியின் நிறுவனம்- நிதி தொடர்பான சேவையை நிறுத்திய Bank oF New York Mellon Corp நிறுவனம்

Leave a Reply