யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்

66278645 3626371894055683 8019731821795213312 n யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்

1995ம் ஆண்டு, ஜூலை 9ம் நாள்  அதிகாலை யாழ் மாவட்டத்தில் சிறீலங்கா படையினரால் முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய நாள்,  மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சென். பீற்றர்ஸ் தேவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்தனர்.

இதே வேளை, அன்றைய நாள் மாலை 5.45 மணியளவில்  யாழ். நவாலி புனித பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது  சிறீலங்கா விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதலில்   குழந்தைகள் பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

நவாலி படுகொலை....! - ஈழப்பறவைகள்

எமது தமிழ் மக்கள் மிகவும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளை நினைவு கூர்ந்து, தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Leave a Reply