இந்திய விவசாயிகளின் தேசிய மாநாடு – நாடு முழுவதும் உற்சாக வரவேற்பு

Farmers Protest EPS Image இந்திய விவசாயிகளின் தேசிய மாநாடு – நாடு முழுவதும் உற்சாக வரவேற்பு

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை நீக்க கோரி போராடி வரும்  விவசாயிகளின் போராட்டம், 09ஆவது மாதத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய விவசாயிகள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அதற்கு நாடு முழுவதிலுமிருந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருவதாகவும் போராடும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியன பாராளுமன்றத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு கடும் எதிர்ப்பிற்கு இடையில் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பெருமளவிலான விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலையும் செய்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம், 09ஆவது மாதத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு  நாடு தழுவிய விவயாயிகள் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சக் கணக்கான விவசாயிகளின் ஒன்பது மாதங்களாக தொடர்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க அமைதி வழி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதைக் குறிக்கும் வகையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா  வரும் 26ம் திகதி தேசிய மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021