இலங்கை: சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த டீசல் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தகவல்

நங்கூரமிட்டிருந்த டீசல் கப்பலுக்கு பணம்

நங்கூரமிட்டிருந்த டீசல் கப்பலுக்கு பணம்

சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த சிங்கப்பூர் நிறுவனமான விட்டோலுக்குச் சொந்தமான கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பலில் 37,500 மெட்ரிக் தொன் டீசல் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்காக இலங்கை 52 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும்.

இந்நிலையில் சுமார் சர்வதேச கடற்பகுதியில் கப்பல் நிலையாக இருந்த 16 நாட்களுக்கு 92 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டது.

இன்று பிற்பகல் டீசல் கையிருப்பு இறக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடன் பத்திரங்களுக்கான பணத்தை செலுத்தாத காரணத்தினால் மேலும் இரண்டு எரிபொருள் தாங்கிகள் தற்போது சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.