யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
46 வயதான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற மரண தண்டனை கைதியே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்களின் மரண தண்டனையை அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இந்தநிலையில் குறித்த தீர்ப்பை அறிவிப்பதற்காக யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.



