2023 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகள்

image 713a45a546 2023 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகள்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய 4 ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி  வருகிறது . இவர்களோடு மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசாவும் இந்த நிதியை பெறுகிறார்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 இலங்கைப் பிரஜைகளுக்கு பொருளாதாரப் பேரழிவைக் கொண்டு வந்துள்ளதால் திறைசேரி 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை தன்னால் இயன்ற அனைத்து வகைகளிலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனினும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை தெளிவுபடுத்தும் வகையில் திறைசேரியால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, கடந்த 2023ஆம் ஆண்டுகளை போலவே எந்தவித குறைவும் இன்றி அரச தலைவர்களுக்காக மில்லியன் கணக்கான தொகைகள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகஅரச தலைவர்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளன .

சந்திரிகா குமாரதுங்க –

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்க சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஓய்வூதிய கொடுப்பனவாக 2022 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட அதே தொகையான 1,170,000 ரூபாவை திறைசேரி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், குமாரதுங்கவிற்கு மேலும் ரூ.3.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றவை’ என்ற தலைப்பின் கீழ் 2021 இல் ரூ 1.4 மில்லியனும் 2022 இல் ரூ. 3 மில்லியனும் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு நிதி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது .

இதனோடு மூலதன செலவினத்தின் கீழ் ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ என்ற தலைப்பின் கீழ் ரூ.1 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023 இல் வாகனங்களுக்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்காக 2021 இல் 0.558 மில்லியன் ரூபாவும் 2022 இல் 2 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, திறைசேரி மகிந்த ராஜபக்சவுக்கு ஓய்வூதியப் பலன்களாக 1 மில்லியன் 170,000 ரூபாயை ஒதுக்கியுள்ளது, இது 2022 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட அதே தொகையாகும். ‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேலும் ரூ.11 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 க்கு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபா மற்றும் 2021 க்கு ஒதுக்கப்பட்ட 6.8 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில் 2023 இல் நிதி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது .’கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ கீழ் மஹிந்த ராஜபக்வுக்கு 2022 இல் ஒதுக்கப்பட்ட அதே 1 மில்லியன் ரூபா ஒதுகப்பட்டுள்ளது.

அதேவேளை 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 2 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 2023 இல் வாகனங்களுக்காக 8 மில்லியன் ரூபா அதிகரிப்பு செய்யப்பட்டு 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 800 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டது. விஜேராம இல்லம் புனரமைக்கப்படும் போது அவர் பௌத்தாலோக மாவத்தையில் தற்காலிகமாக வாழ்ந்த அரச இல்லம் தற்போது அவரது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, கோட்டாபய ராஜபக்ஷவின் தனது தவறான நிர்வாகத்தால் ஜூலை 2022 இல் அவர் பதவியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. , பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக் இப்போது அரசு வழங்கிய ஆடம்பரமான அரசு பங்களாவில் வசிக்கிறார்.

மைத்திரிபால சிறிசேன

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஓய்வூதிய கொடுப்பனவாக 2022 இல் ஒதுக்கப்பட்ட அதே தொகையான 1 மில்லியன் 170,000 ரூபாவை திறைசேரி ஒதுக்கீடு செய்துள்ளது. ‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், சிறிசேனவுக்கு மேலும் ரூ.11 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 இது 2022 க்கு ஒதுக்கப்பட்ட ரூ 10 மில்லியன் மற்றும் 2021 க்கு ஒதுக்கப்பட்ட ரூ 7.9 மில்லியனுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பு ஆகும். ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’செலவின் கீழ் ரூ.1 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 2 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில் 2023 இல் வாகனங்களுக்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச

திறைசேரி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஓய்வூதிய பலன்களாக 1 மில்லியன் 170,000 ரூபாவை 2023 ஆம் அடுக்காக ஒதுக்கியுள்ளது. ‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், 2023 ஆம் ஆண்டிற்கான மேலும் ரூ.10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவினத்தின் கீழ், ரூ.1 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்காக ரூ.2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹேமா பிரேமதாச

ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவிற்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய கொடுப்பனவாக திறைசேரி ரூ.780,000 ஒதுக்கியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, இது 2022 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட அதே தொகையாகும்.

‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், 2022 க்கு ஒதுக்கப்பட்ட 1.3 மில்லியன் 2021 க்கு ஒதுக்கப்பட்ட 770,000 உடன் ஒப்பிடுகையில் 2023 க்கு ரூ.1.5 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது.2023 இல் வாகனங்களுக்காக 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நன்றி- தினக்குரல்