13 ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் சவக்குழி : செல்வராசா கஜேந்திரன் கருத்து

இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது திணித்த கூட்டு சதியே 13 ஆவது திருத்தச்சட்டம் இது தமிழர்களுக்கு சவக்குழி மரண பொதி இதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என என பாராளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசமும் இறைமையும் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு எட்டப்படும் வரை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த மக்களுடன் தொடந்து குரல் கொடுக்கும் தென்தமிழீழ மண்ணில் நின்று கொண்டு இந்த மக்கள் செய்யும் பிரகடனம் என   செல்லவராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பெப்பிரவரி 4 கரிநாள் ஒற்றையாட்சியையும் 13 வது திருத்தத்தை ஒழுப்போம் என்ற தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு நகரில் நேற்று சனிக்கிழமை (4) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  செல்லவராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

“பிரித்தானியர்களால் சுதந்திரம் வழங்கப்பட்ட நாள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆழுகின்ற இறைமை அதிகாரத்தை சிங்கள தேசத்திடம் தாரைவாத்து 1948 ஆண்டு இதே நாளில் ஆங்கிலேயர் சிங்கள பேரினவாதத்திடம் அடிமைப்படுத்திச் சென்று 75 ஆண்டுகளாக இந்த நாளை தமிழர்கள் இருண்ட கரிநாளாக தொடர்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர்.

தமிழர்கள் சதந்திரமாக இந்த தீவில் வாழவேண்டுமாக இருந்தால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் அங்கீகிக்கப்படவேண்டும் தமிழர்களுடைய தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்க வேண்டும் சுயநிர்ணய ஊரிமையுடனான சமஷ்டி தீர்வு வேண்டும் ஒரு புதிய சமஷ்டி அரசியல் அமைப்பு இலங்கைக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது 75 வருடங்களாக தமிழர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

இலங்கைக்கு 1948 சுதந்திரம் கிடைக்கும் போது இருந்த ஒரே ஒரு தமிழ் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி முதல் முதல் நடந்த தேர்தலிலே ஓற்றையாட்சி அரசியல் யாப்பை  நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றினர். அன்றைய நாளில் இருந்து இலங்கையில் 1948 ,72, 78 , நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்பை தமிழர்கள் நிராகரித்து வந்துள்ளனர்.

பின்னர் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி தமது தேச அங்கீகாரத்துக்காக போராடியுள்ளனர் 2009 மே 18ம் திகதிவரைக்கும் தமிழர்கள் தங்கள் தேசத்தின் இறைமையும் சுயநிர்ணய உரிமை என்ற அங்கீகாரத்துக்காக தியாம் நிறைந்த உயிர் கொடுக்கின்ற புனித போராட்டத்தை நடாத்திவந்தனா.

தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பினர் அந்த தலைமைத்துவத்தை தாம்பாளத்தில் வைத்துக் கொண்டு தமிழர்களின் தலைமைத்துவத்தை பெற்றுக் கொண்டனர்.

2009 மே 18 ம் திகதி போராட்டம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு வந்த சுதந்திர தினங்களிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அதன் பேச்சாளர் எம்.சுமந்திரனும் அதில் கலந்து கொண்டு தமிழர் தேசத்தில் புலிகள் அழிக்கப்பட்டதை சிங்களவர்களுடன் சேர்ந்து ஒரு வெற்றி விழாவாக கொண்டாடினார்கள் தமிழ் மக்களை கொன்ற ராஜபஷக்களுக்கு பாராளுமன்றத்தில் பாராட்டு தெரிவித்தனர்.

இன்று அதே தரப்பினர் மக்களால் இனங்காணப்பட்டு மக்கள் முன்னே வரமுடியாத நிலையில் இன்று கூட்டமைப்பு என்றதை தொலைத்துவிட்டு தனித்தனி அடையாளத்துடன் மக்கள் முன்னல் நின்று கொண்டிருக்கின்றனர்.

இலங்கை தீவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் இந்தியாவினுடைய நலன்கள் மற்றும் அமெரிக்கா ஜரோப்பிய நாடுகளின் பூலோக நலன்களை பேனுவதற்கு 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற பெயரிலே இந்தியாவும் இலங்கையும் கூட்டுசதி செய்து 13 திருத்த சட்டத்தை உருவாகினர்.

அதன் மூலம் மாகாணசபை கொண்டுவரப்பட்டது அதன் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியிடம் இருக்கின்றது அவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் இருக்கின்றது மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சருக்கே அமைச்சர்களுக்கே எந்த அதிகாரமும் இல்லை. மாகாணசபைக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதுடன் காணி காவல்துறை  அதிகாரம் கிடையாது என்பதுடன் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமும் என உச்ச நீதிமன்றம் 30 தீர்ப்புக்களில் தெரிவித்துள்ளது.

2016 ஜனவரி மாதத்தில் இருந்து 2018 டிசம்பர் மாத்துக்குள் ரணில் மைத்திரி நல்லாட்சி கலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற பெயரிலே ஓரு அரசியல்  அமைப்பை வரைவை உருவாக்கினர் அந்த அரசியல் அமைப்பில் இரா.சம்மந்தன், பௌத்த மதம் முதன்மை மதம் என எழுத்துமூலமாக கையொப்பம் வைத்துள்ளார். இது தமிழர்களுக்கு செய்யப்பட்ட மிகப் பெரும் துரோகம்.

அதேபோல வடக்கு கிழக்கு இணைப்பை கைவிடுவதற்கும் சமஷ்டியை கைவிடுவதற்கு இனங்கியுள்ளதுடன் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை எங்கள் மீது திணிக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டுவருவதற்கு இனங்கியுள்ளனர் அதை நாங்கள் இன்று நிராகரிக்கும் வகையில் இந்த பேரணியை செய்துள்ளோம்.

இந்த 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் விக்கினேஸ்வரன் அணியினர் நிற்கின்றனா். ஏனையவர்கள் அரசாங்கத்துடன் நின்று கொண்டு ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இன்று அவர்களும் சுதந்திர தின கரிநாள் என்ற பேர்வையில் நீலிமுதலிக்கண்ணீர் வடிக்கின்றனர் ஏன்என்றால் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து ஒற்றையாட்சிக்குள் 13 ஏற்றுக் கொண்டு தயாராகிவிட்டனர். மக்கள் தங்களை இனங்கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ரணிலுக்கு எதிர் போல் நாடகமாடிக் கொண்டுள்ளனர். இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஒரு அழைப்பு விடுத்தார். நான் இனப்பிரச்சனையை ஓராண்டில் தீர்க்கப் போவதாகவும் தமிழ் தலைவர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டிருந்தார் இதன்போது ரணிலுக்கு பதிலளித்த எம். சுமந்திரன்  இனப்பிரச்சனை தீர்வுக்கு எடுக்கின்ற முயற்சியை வரவேற்பதாகவும் 2016 நல்லாட்சி காலத்தில் வரையப்பட்ட அரசியல் அமைப்பின்  அடிப்படையில் தீர்வுகான முற்பட்டால் ஓராண்டு தேவையில்லை 3 மாத்தில் தீர்வு வந்துவிடும் என்றார்.

இந்தியா தனது பிராந்திய நலன்களை பேணுவதற்காக தமிழர்களை 13 ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்தித்து தமிழர்களை அழிக்கின்ற நடவடிக்கைக்கு தொடர்ந்தும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. தமிழர்களிடம் வாக்குகளை பெற்று கொண்டு பிரதிநிதிகள் என்று சொல்லுகின்றவர்கள் இந்தியாவிடம் சலுகைகளை பெற்றுக் கொண்டு 13 வதை நடைமுறைப்படுத்தல் என்ற பேர்வையிலே ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றனர்.

இதனை மக்களும் புரிந்து கொள்ளவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு பலியாககூடாது விழிப்படைய வேண்டும் என்பதுடன் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த வொரு தீர்வையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.