எதிர்க் கட்சி தலைவருடன் அரசுக்கு ஆதரவு வழங்கிய 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

291 Views

 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப் படுத்தும்  இஷாக் ரஹுமான் ஆகியோர்  (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்  அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்த இவர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் இதன் போது அவர்கள் தெரிவித்தனர்.

மேற்குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply