தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளில் துயிலுமில்ல வளாகத்தில் அஞ்சலி

277 Views

IMG 20220514 WA0030 தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளில் துயிலுமில்ல வளாகத்தில் அஞ்சலி

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்டதன் நினைவாக தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம் வருடம்தோறும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது

குறித்த காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்ற பல்வேறு பகுதிகளிலும் தமிழின படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் உடைய மூன்றாம் நாள் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தது

இந்த வகையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் உள்ள தீருவில் துயிலுமில்ல வளாகத்தில் சமூக செயற்பாட்டாளர்களான பீற்றர் இளஞ்செழியன் மற்றும் நிசாந்தன் ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை இன்றைய தினமும் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்ட போது உணவின்றி தவித்த வேளையில் அவர்களுக்கு உயிர்காத்த உணவாகிய கஞ்சி வழங்குகின்ற நிகழ்வுகளும் வடக்கு கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Tamil News

Leave a Reply