தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அமெரிக்க உடன்பாடு

426 Views

தமது மிலேனியம் சலஞ் உடன்பாட்டை சிறீலங்கா அரசு தனது சொந்த அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திவருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் சிறீலங்கா அரசு அது தொடர்பான விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

முன்னைய ஐ.தே.க அரசு அமெரிக்காவிடம் நாட்டின் இறைமையை விற்றுள்ளதாக குற்றம் சுமத்திவரும் கோத்தபாயா ராஜபக்சா அரசு தற்போது பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் உடன்பாட்டு விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளதானது தேர்தல் உள்நோக்கம் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 25 ஆம் நாள் இந்த அறிக்கையானது சிறீலங்கா அரச தலைவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனல் அதனை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடுமாறு விசாரணைக்குழுவை கோத்தபாயா கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அறிக்கை சிறீலங்கா அரசின் மூன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டின் நிதியான 480 மில்லியன் டொலர்களில் 10 மில்லியன் டொலர்களை முன்னைய அரசு பெற்றுக்கொண்டுள்ளதாக அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளபோதும் அமெரிக்கா அதனை மறுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply