யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு

357 Views

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் பெயர்களும், அங்கிருந்து உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுவதுடன், குறித்த அமைச்சின் ஊடாக மூன்று பேரில் இருந்து ஒருவரை,  துணைவேந்தராக அரசுத் தலைவர் தெரிவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மதிப்பீடு செய்து தெரிவான மூவரின் பெயர்களை அரசுத் தலைவரின் தெரிவுக்காக முன்வைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம்  இடம்பெறவுள்ளது.

Leave a Reply