கோட்டாபயவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கிழித்தெறியப்பட்ட மே 18 துண்டுப்பிரசுரம்

284 Views

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழ் மக்கள் மே 18 நினைவேந்தல் நாளை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மத்தியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

இவ்வாறு விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கிழித்தெறிந்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கருத்து தெரிவிக்கையில், “அவர் கிழித்தெறிந்தது துண்டுப்பிரசுரத்தை மாத்திரமல்ல, மூவின மக்கள் வாழும் – இனவெறியற்ற – இலங்கைக்காக போராடுகின்றோம்’ என்ற முகத்திரையையும்தான் என தெரிவித்துள்ளார்கள்.

Tamil News

Leave a Reply