முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்- பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பேரணியும்

328 Views

m2 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்- பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பேரணியும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் இன்று(16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  நடைபெற்றது.

இனஅழிப்பின் 13வது நினைவு

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில்   பேரணி ஒன்று மட்டக்களப்பில் ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இனஅழிப்பின் 13வது நினைவு

திருகோணமலை தம்பலகாமம்,நான்குவாசல் பிள்ளையார் கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

தம்பலகாமம் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் வழிகாட்டலில்  இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் போது நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வுகள் இது வரை வெளியிடப்படவில்லை தீர்க்கமான முடிவுகளை   பெற்றுத் தாருங்கள். தற்போதைய புதிய அரசாங்கத்தை நம்புவதாக இருந்தால் அரசியல் கைதிகள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.

எத்தனையோ பிள்ளைகள் தங்களது தந்தையை இழந்து தவிக்கின்றனர் நீதியை நிலை நாட்டுங்கள்.

எல்லோரும் எங்கள் பிள்ளைகளை தமிழ் முஸ்லிம் சிங்களமாக இருந்தாலும் ஒரு தாய் நாட்டை நேசிக்கின்ற பிள்ளைகளே இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிறுத்தி நினைவேந்தலை செய்து கஞ்சி குடித்தாலும் மனதில் கவலையே குடி கொண்டு வாழ்கிறது.

Leave a Reply