154 Views
இன விடுதலையை நோக்கி, முள்ளிவாய்க்காலுக்கான நடை பவனி யாழ்ப்பாணம், வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இருந்து இன்று ஆரம்பமாகியுள்ளது.
நடை பவனியின் தொடக்கமாக வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்றப்பட்டதன் பின்னர் இன விடுதலைக்கான நடை பவனி ஆரம்பமாக உள்ளது.
வடக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள, சர்வமதத் தலைவர்கள், வெகுஜன அமைப்புக்கள் இணைந்து வல்வெட்டித்துறை ஆலடியில் இருந்து இன விடுதலையை நோக்கி, முள்ளிவாய்க்காலுக்கான நடை பவனியை ஆரம்பிக்கவுள்ளனர்.
இவ்வாறு வல்வெட்டித்துறையில் இரந்து ஆரம்பிக்கும் நடை பவனி நாளை மறுதினம் முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.