காலிமுகத்திடலில் மே-18 நினைவேந்தல் முன்னெடுப்பு!

காலிமுகத்திடலில் மே-18 நினைவேந்தல்

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

My 18 in colombo காலிமுகத்திடலில் மே-18 நினைவேந்தல் முன்னெடுப்பு! My 18 in colombo 2 காலிமுகத்திடலில் மே-18 நினைவேந்தல் முன்னெடுப்பு! My 18 in colombo 3 காலிமுகத்திடலில் மே-18 நினைவேந்தல் முன்னெடுப்பு! My 18 in colombo4 காலிமுகத்திடலில் மே-18 நினைவேந்தல் முன்னெடுப்பு!

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச தரப்பினரை பதவி விலக வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மே-18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளின் 13 ஆவது ஆண்டு நினை தமிழர் தாயகம் உள்ளிட்ட உலகத்தமிழர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காலிமுகத்திடலில்
போராட்டகாரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் பகுதி கடற்கரையோரமாக ஒன்று கூடி சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தலில் சிங்கள மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

Tamil News