“மேரியோபோல் நகருக்கு உதவி செய்ய முடியவில்லை”-சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

312 Views

உதவி செய்ய முடியவில்லை

ரஷ்யா,  உக்ரைன் ஆகிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பாதிப்படைந்த மேரியோபோல் நகரத்திற்கு இன்னும் எந்த உதவி செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

“இரு நாடுகளும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அவர்கள் இதற்கான பாதைகளையும், மக்களை மீட்பதற்கான தேவையான நேரத்தையும் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும். தற்போது அங்கு செல்ல எங்களுக்கு எந்த குழுவும் இல்லை”, என்று  சர்வதேச செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர் மாட் மொரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கபட வேண்டும் என்றும், வலுக்கட்டாயமாக வெளியேற்றபடக்கூடாது என்றும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

மேரியோபோல் நகரில் உள்ள பலரும் பல வாரங்களாக உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

நன்றி- பிபிசி

Leave a Reply