இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று

315 Views

குறையும் கொரோனா தொற்று

குறையும் கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சேர்த்து கொரோனாவால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று கொரோனாவுக்காக தற்போது சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 859 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது.

Tamil News

Leave a Reply