திருகோணமலை மாவட்டத்தில் மூன்று மாதத்தினுள் 27 காச நோயாளர்கள்

181 Views

மூன்று மாதத்தினுள் 27 காச நோயாளர்கள்

திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மூன்று மாதத்தினுள் 27 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை மாவட்ட சுவாச நோயியல் பிரிவின் வைத்தியர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 27 புதிய காச நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு 100 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், காச நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது.

“மேலும், சுவாச நோயினால் ஏற்படும் காச நோயானது திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி, கிண்ணியா, மூதூர் மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசத்திலே அதிகளவான நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளனர்” என்றார்

Tamil News

Leave a Reply