காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்பு

115 Views

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் நிலையில் அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செவ்வாய்கிழமை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றன. புதன்கிழமை நடக்கும் விழாவில், காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் மிஸ்த்ரி மல்லிகார்ஜூன கார்கேவிடம் தேர்தல் வெற்றி சான்றிதழை முறையாக ஒப்படைத்தார். இதில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.

கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவர், மாநிலங்களவையின் எதிர்கட்சிகளின் தலைவராக பதவி வகித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, தொடர் தேர்தல் தோல்விகளுக்கு பின்னர் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பொறுப்புக்கு வர விரும்பாத நிலையில், கட்சியின் நெருக்கடியான சூழ்நிலையில் 80 வயதான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply