இந்தியா :மழையை வரவைக்க சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலம் -அறிக்கை கோரியது குழந்தைகள் நல ஆணையம்

115 Views

மழையை வரவைக்க சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலம்

மழையை வரவைக்க சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலம்: மழை வர வைப்பதற்காக ஆறு சிறுமிகளை நிர்வாணமாக்கி, அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியில் நடந்த இந்த நிகழ்வின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

தவளை ஒன்று கட்டப்பட்டுள்ள மரக்கட்டை ஒன்றை அந்த ஆறு சிறுமிகளும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு செல்வதை அந்தக் காணொளிகள் காட்டுகின்றன.

சிறுமிகளை நிர்வாணமாக்கி இவ்வாறு செய்யப்படும் சடங்குகள் மழைக் கடவுளின் மனதை குளிர்வித்து அந்த பகுதிக்கு மழையை உண்டாக்கும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

இந்த நிகழ்வு குறித்து முறைப்படி எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய பிரதேச காவல்துறை சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலமாக நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நிகழ்ந்த கிராமம் அமைந்துள்ள தாமோ மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து இது குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு குழந்தைகள் பாதுகாப்புக்கான இந்தியாவின் தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply