லிபியா: படகு விபத்தில் 75 அகதிகள் பலி

112 Views

படகு விபத்தில் 75 அகதிகள் பலி

லிபியா அருகே மத்தியரதரைக் கடலில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 75 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

படகு விபத்தில் 75 அகதிகள் பலியான சம்பவத்தில் இத்தாலியில் அடைக்கலம் தேடி சென்று கொண்டிருந்த அந்த அகதிகளில் 15 பேரை மட்டும் மீனவர்கள் மீட்டு லிபியா அழைத்துச் சென்றனர். கடந்த வாரம் நேரிட்ட இந்த விபத்து குறித்து ஐ.நா. அகதிகள் முகமை சனிக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 420 அகதிகளை இத்தாலிய கடலோரக் காவல் படை சனிக்கிழமை மீட்டது. அவா்களில் 70 பேர் இத்தாலிக்குச் சொந்தமான லாம்பெடுசா தீவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply