அடுத்து வரும் 5 வருடங்களில் அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை உடையும் அபாயம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

392 Views

அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை

அடுத்து வரும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள், அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதுவரை நிலையாக உள்ள த்வைட்ஸ் பனிப்பாறையின் மிதக்கும் பகுதி, கார் கண்ணாடி சிதறவதைப் போல் உடையக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் உருகும் விகிதம் அதிகரித்துள்ளதால், தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் த்வைட்ஸில் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, ஒவ்வோர் ஆண்டும், இந்த பனிப்பாறை 50 பில்லியன் டன் பனிக்கட்டியை பெருங்கடலில் குவிக்கிறது. இது உலகளாவிய கடல் மட்ட அளவில் குறைவான தாக்கத்தையேகொண்டுள்ளது.

ஆனால், இவையனைத்தும் உருகினால், பெருங்கடலின் உயரத்தை 65 செ.மீ உயரப் போதுமான பனிக்கட்டி இந்த பனிப்பாறையின் வடிகால் படுகையில் உள்ளது.

இத்தகைய “கடுமையான” சூழல் ஏற்பட பல நூற்றாண்டுகளுக்கு வாய்ப்பில்லை. ஆனால், புவி வெப்பமாயமாதல் தற்போது த்வைட்ஸில் மிகவும் வேகமாக எதிரொலிப்பதாக ஆய்வுக்குழு தெரிவிக்கிறது.

” பெரும்பாலும் பத்தாண்டுக்குள் இந்தப் பனிப்பாறையில், பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது. வெளியான ஆய்வுகளும், வெளியிடப்படாத ஆய்வுகளும் இதையே குறிப்பிடுகின்றன”, என்று சர்வதேச த்வைட்ஸ் பனிப்பாறை கூட்டமைப்பின் (International Thwaites Glacier Collaboration). அமெரிக்காவின் மூத்த ஒருங்கிணைப்பாளரும் பனிப்பாறை நிபுணருமான பேராசிரியர் டெட் ஸ்காம்போஸ் கூறுகிறார். “இது த்வைட்ஸ் உருகும் வேகத்தை துரிதப்படுத்தும். இதனால் பனிப்பாறையின் ஆபத்தான பகுதி அகலமாக வழிவகுக்கும் “, என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

த்வைட்ஸ் ஒரு பேருருவ வடிவமானது. கிட்டத்தட்ட பிரிட்டன் அல்லது ஃப்ளோரிடாவின் பரப்பளவுக்கு இணையானது. கடந்த 30 ஆண்டுகளில் இதிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் இரண்டு மடங்காகியுள்ளது. இதற்கு அடியில் பாயும் வெப்பமான நீர் பனிக்கட்டியை மெலிதாக்கி, வலுவிழக்கச் செய்கிறது.

நன்றி- பிபிசி ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad அடுத்து வரும் 5 வருடங்களில் அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறை உடையும் அபாயம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

Leave a Reply