பு.சத்தியமூர்த்திக்கு யாழ். ஊடக அமையத்தில் நினைவேந்தல்: இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது சக ஊடகவியலாளர்களால் சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலியும் நடைபெற்றது. இதன்போது ஊடகர் சத்தியமூர்த்தி பற்றிய நினைவுரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் பங்குகொண்டிருந்தனர்.