தேசியமட்ட பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா வீராங்கனைகள்

435 Views

தேசியமட்ட பளுதூக்கும் போட்டியில்

வவுனியாவை சேர்ந்த மூன்று யுவதிகள், இளையோர்/ கனிஷ்ட மற்றும் சிரேஸ்ட புதியவர்களுக்கான தேசியமட்ட பளுதூக்கும் போட்டியில் வெற்றிபெற்று வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

கா/போத்திவல மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) இல் நேற்றையதினம் (11) நடைபெற்ற இளையோர்/ கனிஷ்ட மற்றும் சிரேஸ்ட புதியவர்களுக்கான பளு தூக்கல் போட்டி இடம்பெற்றுள்ளது.  இப் போட்டியில் 44kg எடை பிரிவில் 85kg எடை தூக்கி பானுஜா சுரேஸ்குமார்   2ம் இடத்தையும், 56kg எடை பிரிவில் 71kg எடை தூக்கி விதுசியா சுரேஸ்குமார்   2ம் இடத்தையும், 76kg எடை பிரிவில் 94kg எடை தூக்கி செரோண்யா பாலசுப்ரமணியம்  2ம் இடத்தையும் பெற்று வவுனியா பளு தூக்கல்  கழகத்தின் பயிற்றுவிப்பாளர், ஞா.ஜீவன் அவர்களுக்கும் வவுனியா  மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த  பெண்கள் அதிகம் பளு தூக்கும் போட்டிகளில். வெற்றிபெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply