இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்களை வெளிக்கொண்டு வந்தவர் ஜோன்

குற்றங்களை வெளிக்கொண்டு வந்தவர் ஜோன்

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர் ஜோன் ஸ்னோ தனது 74 ஆவது வயதில் பணியில் இருந்து ஒய்வு பெறுகின்றார்.

போர் இடம்பெறும் நாடுகளில் அதனால் பாதிக்கப்படும் மக்களின் வலிகளை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதில் இவரின் பங்கு அளப்பெரியது.

இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்களை வெளிக்கொண்டு வந்தவர் ஜோன். ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் சிறுவன் பாலச்சந்திரன் ஆகியோரின் படுகொலை தொடர்பான காணொளியை வெளிக் கொண்டுவந்ததிலும் இவரின் பங்கு அளப்பெரியது.

சனல் -4 தொலைக்காட்சி நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பெருமளவான தொண்டுப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை (23) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வின் போது தன்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்ததுடன், தன்மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தார். “உண்மைகளை மக்களின் முன் கொண்டுவருவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக எனக்கு கிடைத்தது அதனை நான் சரியாக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரின் சேவையைப் பராட்டி பல ஊடகவியலாளர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஜோன் ஒரு நல்ல மனிதாபிமானம் கொண்டவர். எமது வரலாற்றில் அவரின் பங்கு மறக்க முடியாதது என அந்த நிறுவனத்தின் மற்றுமொரு ஊடகவியலாளர் கிருஸ்ணன் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வலிகளையும், இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும் உலக அரங்கில் கொண்டுவந்து உண்மை நிலையை வெளி உலகிற்கு தெரியப்படுத்தியதில் ஜோன் இன் பங்கு முக்கியமானது. அவரின் இந்த பணி எமது வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறுவதுடன், அவருக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளை இலக்கு  இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.

class=”aligncenter size-full wp-image-67601″ src=”https://www.ilakku.org/wp-content/uploads/2021/12/ilakku-Weekly-Epaper-162-December-26-2021_Ad.webp” alt=”Tamil News” />