கோவிட் நெருக்கடி – 4500 விமானப் பயணங்கள் இரத்து

4500 விமானப் பயணங்கள் இரத்து

புதிதாக பரவிவரும் ஒமிக்ரோன் கொரோனா வைரசின் பாதிப்புக்களால் உலகம் எங்கும் கடந்த இரு தினங்களில் 4500 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நத்தார் விடுமுறை வார இறுதி நாட்களில் இந்த இரத்துக்கள் இடம்பெற்றுள்ளதானது, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை அதிகம் பாதித்துள்ளதுடன், பல நாடுகள் மற்றும் நிறுவனங்கள் பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளன.

வெள்ளிக்கிழமை (24) 2000 விமானப்பயணங்களும், சனிக்கிழமை (25) 24000 விமானப்பயணங்களும், ஞாயிற்றுக்கிழமை (26) 600 விமானப்பயணங்ககும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும் 11,000 இற்கு மேற்பட்ட விமானப் பயணங்கள் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.