யாழ். இந்திய துணைத் தூதராலயத்தில் மகாகவி நினைவு தினம்

401 Views

யாழ். இந்திய துணைத் தூதராலயத்தில் மகாகவி நினைவு தினம்

யாழ். இந்திய துணைத் தூதராலயத்தில் மகாகவி நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 100 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (11.09.2021) காலை யாழ். இந்திய துணைத் தூதுவராலயத்தில் மிக அமைதியாக இடம்பெற்றது. 

யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தூதுவர் மற்றும் அதிகாரிகள் சகிதம் மலர் மாலையிட்டு வணக்கம் செலுத்தினார்கள்.

கோவிட் -19 சூழ்நிலை காரணமாக. சுகாதார நடைமுறைகளைக் கருத்திற் கொண்டு மிக அமைதியாக இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாநகர முதல்வர் மற்றும் யாழ். மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இணையவழி ஊடாக பங்குபற்றி பாரதியார் குறித்து சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply