பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவியுங்கள்

474 Views

கைது செய்யப்பட்டவர்களை விடுவியுங்கள்

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவியுங்கள் என்று அவர்களின் உறவினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து, கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபயவிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய தினம்  திருகோணமலையில் முகநூலில் பதிவிட்டதன்  அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்சமயம் சிறையில் இருக்கும் நபர்களின் பெற்றோர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை ஒழுங்கமைத்து இருந்தனர்.

இதன்போது பாலகிருஷ்ணன் சுகுந்தகுமாரி கருத்து தெரிவிக்கையில்,

பாலகிருஷ்ணன் ரதிகரன் (28 வயது) மகனை கடந்த வருடம் 27.11.2020 திகதி முகநூலில் கவிதை பதிவிட்டதற்கு கைது செய்ததாகவும், சுமார் ஒரு வருடமாக தன்னுடைய மகனை இழந்து தனது குடும்பம் அல்லல் உறுவதாகவும் குறிப்பிட்டார், அத்துடன் ஜனாதிபதியிடம்  மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரம் சண்முகராஜா கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில்,  தனது மகன் விதுலக்ஸ்சன் (24 வயது) 2.07.2021 திகதி கைது செய்யப்பட்டதாகவும், அவரது உழைப்பில் தான் தங்களுடைய குடும்பம் இருப்பதாகவும், தனது மகனை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

கிறிஸ்டி வினோத் லிஷாலினி கருத்து தெரிவிக்கையில்,

மேலும் கிறிஸ்டி வினோத் (36 வயது) என்பவரின் மனைவி, தனது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதாகவும், இரண்டு பெண் பிள்ளைகளை கொண்ட தனது குடும்பம் தற்சமயம் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாகவும்  எனவே தனது கணவரை உடனே விடுதலையை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply