யாழ் தேர்தல் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய நிலையத்திலிருந்து இன்று காலை  அனுப்பிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளன.இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 5 லட்சத்து 34 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.