நாம் யாருக்கு வாக்களிப்பது;யாரை நிராகரிப்பது-தமிழர் அமைப்புகளின் பார்வை

சரியான கொள்கையுள்ளவர்களுக்கு வாக்களியுங்கள்தமிழ் மக்கள் பேரவை

“பொது மக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக, உரிமைக்காக உழைக்கக் கூடியவர்களையும், சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும், நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களையும் தெரிவு செய்ய தவறாது எமது வாக்குரிமையையும், விருப்பு வாக்குகளையும் பயன்படுத்துவோம்” என தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எமது அடிப்படை அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை தொடர்ச்சியாக நிராகரித்து நிற்கும் பேரினவாத கட்சிகளையும், அவற்றை தேர்தல் காலங்களில் உச்சரிக்கும் கட்சிகளையும், அவற்றால் இறக்கப்பட்டுள்ள குழுக்களையும் நிராகரிப்போம் எனவும் தமிழ்மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.2 நாம் யாருக்கு வாக்களிப்பது;யாரை நிராகரிப்பது-தமிழர் அமைப்புகளின் பார்வை

எமது வாக்குகளை தற்காலிக சலுகைகளுக்காகவும், வெகுமானங்களுக்காகவும் விற்பதை தவிர்ப்போம் என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை, இவ்வாறானவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தி எமது இருப்பினையும் கேள்விக்குள்ளாக்கி விடும் எனவும் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் தலைமைகளை தெரிவு செய்யுங்கள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம்ppp நாம் யாருக்கு வாக்களிப்பது;யாரை நிராகரிப்பது-தமிழர் அமைப்புகளின் பார்வை

தமிழ்த் தேசியத்திற்கு எதிர்த் திசையில் நின்று தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் கடந்த காலங்களில் இருந்து இன்று வரை கொன்றொழித்தவர்களை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும். எமது இனத்தையும், நிலத்தையும் காப்பதற்கு சரியானதும், உண்மையானதுமான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டிய தலையாய கடமை எம் அனைவருக்கும் உண்டு.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் உங்களிடம் கரம்கூப்பி நிற்பது எமது சமூகத்தின் ஒற்றுமையினையே ஆகும். இதனை கருத்திற் கொண்டு எமது வாக்குகளை சிதறவிடாமல் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் தலைமைகளைத் தெரிவுசெய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செயற்திறனற்ற சம்பந்தனுக்கு ஓய்வுகொடுங்கள்திருமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யுங்கள்

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து 20 வருட காலமாக ஒருவரையே நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இம்முறை, தேர்தலின் போது ஒரு மாற்று நபரைத் தெரிவு செய்ய பொது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

கூட்டமைப்பின் சுயநல அரசியல்வாதிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் மறத் தமிழர் கட்சிmara நாம் யாருக்கு வாக்களிப்பது;யாரை நிராகரிப்பது-தமிழர் அமைப்புகளின் பார்வை

நாம் பல அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து ஏமாந்துள்ளோம். எம்மை நாமே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் செயலைச் செய்யாமல் எமது தேசியத்துக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருசில அசமந்த, சுயநல அரசியல்வாதிகளை நாம் புறக்கணிக்கிறோம் என தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பில் வெளியிட்ட அறிக்கையில் மறத் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

அற்ப அபிவிருத்தி சலுகைகளுக்காக மீண்டும் இரத்தக்கறை படிந்த கரங்களை ஆட்சி பீடத்திற்கு கொண்டுவர தமிழ் சமூகம் அனுமதிக்கக் கூடாது.

 சிறீலங்கா அரசுடன் இணக்க அரசியல் செய்யும் கட்சிகளை புறக்கணிப்போம் நாடு கடந்த தமிழீழ அரசுunnamed 7 நாம் யாருக்கு வாக்களிப்பது;யாரை நிராகரிப்பது-தமிழர் அமைப்புகளின் பார்வை

இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், சர்வதேச அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும், தமிழர்களின் நலன்களையும்  இணைக்கும் அரச தந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும், செயலாலும் உண்மையாக வலுப்படுத்தக் கூடியவர்களை சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக தேர்வு செய்ய வேண்டும்

சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போருக்கு  வாக்களியுங்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்jaffna university students union நாம் யாருக்கு வாக்களிப்பது;யாரை நிராகரிப்பது-தமிழர் அமைப்புகளின் பார்வை

கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக் கூடிய ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள். இதன் மூலம் தேர்தலுக்கு முன் எம்மால் எட்டப்பட முடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னாவது செயற்படு தளத்தில் எட்ட முடியுமென்று நாம் நம்புகிறோம்.

தமிழ் கட்சிகளின் நிலை விரக்தி தருவதாக இருந்தலும் தமிழ் மக்களாகிய நாம் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை நாம் தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

போர் மௌனிப்பின் பின் எம் மக்களின் சுயாதிபத்தியத்துக்கான போராட்டத்தை அரசியல் ரீதியாக முன் எடுக்க வேண்டும். இன அழிப்புக்கான பொறுப்புக் கூறலுக்கு இலங்கை அரசை சர்வதேச ரீதியாக உந்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான பரிகார நீதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதிலிருந்து பிறக்கக் கூடிய ஒரு தீர்வே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும்.

எமக்கு நடந்தது இனப்படுகொலை என அடித்துச் சொல்பவர்களுக்கும் வாக்களியுங்கள் – வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர்1 89 நாம் யாருக்கு வாக்களிப்பது;யாரை நிராகரிப்பது-தமிழர் அமைப்புகளின் பார்வை

எமது பிரதேசத்தில் சிங்களக் கட்சிகள், தம் கைக்கூலிகளை தமது சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களக் கட்சிகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு என்பவற்றை எப்படி எம்மால் மறக்க முடியும்? மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

எனவே இவர்கள் எல்லோரையும் இனிவருங்காலங்களில் எமது பிரதேசங்களில் போட்டியிடும் எண்ணமே வராத அளவுக்கு படுதோல்வியடையச் செய்ய வேண்டும்.மேலும் சிங்களக் தேசிய கட்சிகளுடனும், சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களுக்கும், சுயேட்சைகளுக்கும் நீங்கள் எலும்புத்துண்டுக்கு வாலாட்டுபவர்கள் அல்ல உணர்வுள்ள, மானமுள்ள தமிழர்கள் என்பதை வடக்கு கிழக்கு எங்கிலும் புரிய வைக்க வேண்டும்.

ஆகவே, தமிழ் தேசியத்தை விசுவாசத்துடன் நேசிப்பவர்களுக்கும், “எமக்கு நடந்தது இனப்படுகொலை”என அடித்துச் சொல்பவர்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையே தேவை என கோரும் கட்சிகளுக்கே வாக்களியுங்கள். அக்கட்சிகளில் உள்ள பண்பாளர்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்றக் கூடியவர்கள் என உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுபவர்கள் மூவருக்கு உங்கள் விருப்பு வாக்கை அளியுங்கள்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளிய தரப்புகளை நிராகரிப்போம்-அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்ICETR logo small நாம் யாருக்கு வாக்களிப்பது;யாரை நிராகரிப்பது-தமிழர் அமைப்புகளின் பார்வை

இந்த தேர்தலில் நாம் கட்சி பேதம் பாராது, தமிழ்தேசியத்தின்பால் ஈடுபாடுகொண்டுள்ள வேட்பாளர்களை நோக்கி எமது வாக்குகளை அளிக்கவேண்டும். எந்த கட்சியில் இருந்து தமிழ்தேசியத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவுசெய்யப்படும் போதும், தமிழ் இனத்தின் தேசியப் பிரச்சினையில் அவர்கள் அனைவரும் ஒருங்கே நின்று குரல்கொடுக்கும் தகைமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கோட்பாடுகளை உதாசீனம் செய்து, தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளிய தரப்புகளை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிப்பதன் மூலம் வரலாற்றில் மறக்கப்படமுடியாத பாடமொன்றை புகட்டமுடியும். தமது பகுதிகளில் உள்ள வேட்பாளர்களில் தமிழ் இனத்தின் விழுமியங்களை சொல்லிலும் செயலிலும் காப்பாற்றும் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்