மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு

452 Views

692c868038a9be79c5f122ec04ece50f மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு

மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு மலேசிய மன்னர் அப்துல்லா இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து சில தினங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களும் மோதல்களும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 18 மாதங்களுக்கு முன்பு மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திடீரென பதவி விலகினார்.

இதையடுத்து ஏற்பட்ட அரசியல் திருப்பங்களின் முடிவில் மகாதீர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்த மொஹிதின் யாசின், பிரதமராக பொறுப்பேற்றார்.

இருந்தும் பல்வேறு நெருக்கடிகள் எழுந்த நிலையில் அவரும் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அவரது அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும், பின்னர் துணைப் பிரதமராகவும் பொறுப்பு வகித்த இஸ்மாயில் சப்ரி யாகூப் மலேசியாவின் 9ஆவது பிரதமராக தெரிவிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply